1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamal says we will rule in pudhucherry also

புதுச்சேரியிலும் ஆட்சி அமைப்போம்: கமல்ஹாசன்

கமல் கட்சி
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து அதன்பின் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். இந்த தேர்தலில் அவரது கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது மட்டுமின்றி பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் இழந்தது
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ள இக்கட்சி தமிழகத்தில் மட்டுமின்றி புதுவையிலும் ஆட்சியை பிடிப்போம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான காணொளியில் புதுச்சேரியில் ஆட்சி அமைத்திடும் சூழலை உருவாக்குவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சியின் பல்வேறு பிரிவின் புதிய நிர்வாகிகளின் பட்டியலை கமல்ஹாசன் அறிவித்தார். அதன்பின்னர் புதுச்சேரி மாநிலத்த்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்திலும் புதுவையிலும் கமல் கட்சியின் ஆட்சி நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
அடுத்த கட்டுரையில்
இனி மாதந்தோறும் மின் கணக்கீடா? அமைச்சர் தங்கமணி