தொடர்புடைய செய்திகள்
- ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன 138 கிலோ இறைச்சி!
- ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம்! – தஞ்சையில் அதிர்ச்சி!
- மதுரை ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சி – 5 கடைகளுக்கு நோட்டீஸ்
- ஷவர்மா சாப்பிட்ட மாணவி இறப்புக்கு என்ன காரணம்? பிரேத பரிசோதனை தகவல்
- ஷவர்மா பலி எதிரொலி; காஞ்சிபுரத்தில் ஷவர்மா கடைகளில் ரெய்டு!
ஷவர்மா... அட வெளிநாட்டு உணவுகளை ஒதுக்கிடுங்க... அமைச்சர் பேட்டி!
ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
சமீபத்தில் கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் கடை ஒன்றில் சவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சவர்மா கடைகளில் ரெய்டு நடந்து வருகிறது. ரெய்டில் தரமற்ற இறைச்சிகள் சிக்கி அவை அழிக்கப்படுவதோடு கடைகளுக்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஷவர்மா போன்ற மேலைநாட்டு உணவு வகைகள் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும். ஷவர்மா தயாரிப்பதற்கான உயிரிய வழிமுறையை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதனை உண்பதை தவிர்க்கவும் என தெரிவித்துள்ளார்.
