திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 மே 2022 (15:00 IST)

ஷவர்மா பலி எதிரொலி; காஞ்சிபுரத்தில் ஷவர்மா கடைகளில் ரெய்டு!

Sawarma
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஷவர்மா கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் கடை ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மேலும் 30 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு, காமராஜர் சாலைகளில் உள்ள சில கடைகளில் சவர்மா உள்ளிட்ட துரித உணவுகள் விற்கப்படும் நிலையில் அவற்றின் தரம் மோசமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சவர்மா கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.