திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 4 மே 2022 (17:51 IST)

ஷவர்மா சாப்பிட்ட மாணவி இறப்புக்கு என்ன காரணம்? பிரேத பரிசோதனை தகவல்

shawarma
கேரளாவில் நேற்று ஷவர்மா சாப்பிட்டா மாணவி பலியான நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் கேரளாவில் உள்ள ஷவர்மா கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதாகவும் சம்பந்தப்பட்ட ஷவர்மா கடை உரிமையாளர் மற்றும் ஷவர்மா தயாரித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் தற்போது ஷவர்மா சாப்பிட்டதாக பலியான மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஷிகெல்லா என்ற பாக்டீரியா தான் அவருடைய மரணத்திற்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது
 
அசுத்தமான தண்ணீரில் இந்த பாக்டீரியா இருந்ததாகவும், அந்த தண்ணீர் ஷவர்மாவில் கலந்து இருப்பதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது