1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister ramesh talk about ex minister sekar babu

என்னாது தெருக்கூத்தாடிகளா?.. இதுதான் பண்ணையார் மனநிலை!.. சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!

சூரசம்ஹார நிகழ்ச்சி
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யின் பெயரைக் குறிப்பிட்டு நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல் பலரும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் விமர்சனத்திற்கு தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலளித்துள்ளார். 
 
திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாடல் பாடினார். அப்போது தமிழக முதல்வர் விஜய்யின் பெயரைக் குறிப்பிட்டு அவர் பாடியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கிடையில், புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடலுக்கு முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எதிர்ப்பு தெரிவித்தார். அவரது விமர்சனத்திற்குத் தற்போதைய அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
 
என்னாது தெருக்கூத்தாடிகளா? இதுதான் பண்ணையார் மனநிலை. உங்கள் ஆட்சியில் பாடும்போது நன்றாக இருந்ததா? என்று சேகர்பாபுவை நோக்கி ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திமுகவினரின் மனநிலையே பண்ணையார் மனநிலைதான். அந்த மன நிலையில் இருந்துகொண்டு பாடகர்களை தெருக் கூத்தாடிகள் என்று பேசுவது  எந்த வகையில் நியாயம்? எந்த மாதிரியான மன நிலை இது ? என்று கேள்வி எந்ழுப்பியுள்ளார். 
 
மேலும், கலைஞர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார்.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
ஒரே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் அக்வான் புயல்.. தற்போதைய நிலை என்ன?