1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tiruchendur temple admin decided to increase the price

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சேவைக்கட்டணம் உயர்வு!.. கோவில் நிர்வாகம் முடிவு...

trichendur
திருச்செந்தூர் முருகன் கோவில் ஆன்மிகவாதிகளிடமும், பக்தர்களிடம் மிகவும் பிரபலம், கடற்கரையை ஓட்டு அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினமும் இங்கு ஏராளமான பக்தர்கள் நேரில் சென்று வழிபடுகிறார்கள். குறிப்பாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெரும்பாலான மக்கள் அங்கு சென்று வழிபடுகிறார்கள்.

இந்த கோவிலில்தான் தவெக அமைச்சர் ரமேஷ் நேரில்சென்று ஆய்வு நடத்திய போது சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து கொடுப்பதாக சொல்லி சிலர் மக்களிடம் பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. அவர்களின் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது..

இந்நிலையில்தான், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்வேறு சேவை கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. தங்கரத உலா திட்டத்துக்கான சேவைக் கட்டணம் ரூ.2500-லிருந்து 5000 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது. சண்முகார்சனைக்கான கட்டணம் 5000 லிருந்து 30,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் 500 எனவும், விழா நாட்களில் 2 ஆயிரம் என்பதை 2,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, கோயில் வருவாய் குறைந்ததால் சேவைக் கட்டணம் உயர்த்தப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் சேவைக் கட்டணம் உயர்வு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் ஜூலை 7ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக கூறலாம் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.