சென்னை பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து!.. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
சென்னையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிதாக வாட்டர் மெட்ரோ கொண்டு வரும் திட்டம் உருவாகியிருக்கிறது. அதாவது சென்னையில் பக்கிங்காம் கால்வாயில் படகு போக்குவரத்து கொண்டுவரப்படவிருக்கிறது.
எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை 53 கிலோமீட்டர் தூரத்திற்கு வாட்டர் மெட்ரோ சேவையை தொடங்க பரிசீலினை செய்யப்பட்டு வருகிறது. சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் வெளியிட்டிருக்கிறது.
பக்கிங்காம் கால்வாய் என்பது ஆந்திராவின் விஜயவாடா முதல் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரை செல்லும் 420 கிலோ மீட்டர் நீளமுள்ள உப்பு நீர் உப்பங்கழி கால்வாயாகும். ஆங்கிலேயா ஆட்சிக் காலத்தில் இது உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் 163 கிலோ மீட்டரும், ஆந்திராவில் 257 கிலோ மீட்டர் நீளமும் கொண்டது.
ஆங்கிலேயர் காலத்தில் சரக்கு போக்குவரத்துக்கும், சென்னைக்கு விறகு, உப்பு கொண்டு செல்லவும் பக்கிங்காம் கால்வாய் பயன்படுத்தப்பட்டது. இந்த கால்வாய் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை இணைக்கிறது. சென்னை நகரத்தின் வெள்ள நீரை கடலில் சேர்க்கும் மிக முக்கிய வடிகாலாகும். 2004ம் வருடம் சுனாமி வந்தபோது கடற்கரை கிராமங்களை பெருமளவு தாக்காமல் தடுத்தது இந்த பக்கிங்காம் கால்வாய் என்பது குறிப்பிடத்தக்கது.