1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Men asked tea in camel milk and made a chaos

ஒட்டகப்பாலில் டீ கேட்டு அடாவடி… கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள் கைது!

புதுச்சேரி
புதுச்சேரி அருகே போதையில் ஒட்டகப்பாலில் டீ கேட்டு ரகளை செய்த மூவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நாராயணன், கடலூர் சாலையில் டீக்கடையுடன் இணைந்த பேக்கரி நடத்தி வருகிறார். அங்கே நேற்றிரவு வந்த மூன்று பேர் ஒட்டகப்பாலில் டீ வேண்டும் எனக் கேட்டு ரகளை செய்துள்ளனர். அவர்கள் மூவரும் கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படவே கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து கடை உரிமையாளர் நாராயணன் அவர்கள் மேல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்த போலிஸார் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இது சம்மந்தமான விசாரணையில் ஒட்டகப்பால் விற்கும் கடை எதிரே இருந்ததாகவும் இவர்கள் கடைமாறி சென்று பிரச்சனை செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க தேர்தல் முடிவுகள்: பைடனின் வெற்றிக்கு டிரம்பின் சட்ட நடவடிக்கை தடை போடுமா?