கொரோனா இரண்டாவது அலை… இங்கிலாந்தில் மீண்டும் பொது முடக்கம்!

Last Updated: வியாழன், 5 நவம்பர் 2020 (17:13 IST)

இங்கிலாந்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகமாகியுள்ளதை அடுத்து ஒரு மாத கால பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் ஓய்ந்தாலும் பல நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று இங்கிலாந்து.

தற்போது இங்கிலாந்தில் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளதை அடுத்து மீண்டும் ஒரு மாத காலத்துக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் இன்றிலிருந்து டிசம்பர் 2ஆம் தேதி வரையிலான ஒருமாத கால பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :