செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (16:56 IST)

ஹாட்ஸ்டாரிடம் இருந்து படத்தை திரும்பி வாங்கிவிடலாமா என யோசித்தேன் – ஆர் ஜே பாலாஜி பகிர்ந்த சீக்ரெட்!

ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டதாகக் கூறியுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது தீபாவளியை முன்னிட்டு ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.  கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது. இதனால் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு "மூக்குத்தி அம்மன்" படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இது சம்மந்தமாக பேசியுள்ள ஆர் ஜே பாலாஜி ‘சிறு வயதில் இருந்தே தீபாவளி பண்டிகைக்கு பெரிய நடிகர்களின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். இப்போது என் படமே தீபாவளிக்கு ரிலிஸ் ஆகிறது. படத்தின் ஒரு நாள் படப்பிடிப்பை மட்டும் எடுக்காமல் இருந்தேன். ஏனென்றால் அப்படி எடுத்துவிட்டால் எங்கே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்துவிடுவேனோ எனப் பயந்தேன். இந்த படம் திரையரங்கில் பார்க்கவேண்டிய படம்.  அதனால் படத்தைக் கொடுத்த பிறகு கூட மீண்டும் வாங்கிவிடலாமா என யோசித்தேன்.

இந்த படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் எனக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருக்கும். ஆனால் இப்போது உள்ள நிலைமையில் எப்படி அனைவரும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள் என்று நான் எப்படிச் சொல்லமுடியும்?. அதனால்தான் ஹாட்ஸ்டாரிடம் கொடுத்தேன்’ எனக் கூறியுள்ளார்.