1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Medical college mens hostal fired

சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து...! விரைந்த தீயணைப்பு வீரர்கள்

medical college
சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தீ விபத்து...! விரைந்த தீயணைப்பு வீரர்கள்
சென்னை சென்ட்ரல் அருகே உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை சென்ட்ரல் மருத்துவக் கல்லூரி அருகே மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்பு மாணவர் விடுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனால் ஏற்பட்ட கரும்புகை வானுயர எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். முதல் வேலையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் இருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீ விபத்தில் மாணவர்கள் யாருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு உணவு: ஐஆர்சிடிசி தகவல்