வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (20:02 IST)

புகார் அளிக்க வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள்!

fight
சிவகங்கை மாவட்டத்தில்  கல்லூரி மாணவர்கள் இரு பிரிவினர் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த  ராஜா துரைசிங்கம் கலை அறிவியல் கல்லூரியில்  பிஏ., வரலாற்றுப் பாடம் படித்து வரும் பொன் சக்தி, அக்னிராஜ் ஆகிய  இரு பிரிவினருக்கு ஏற்கனவே கடந்த மாதம் மோதல் இருந்து வந்த நிலையில், கல்லூரி முதல்வர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் மீண்டும் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில், பொன் சக்தி தன் தந்தை   நண்பர்களுடன் வந்து அக்னிராஜ் தரப்பினருடன் சமாதானம் பேச வந்துள்ளனர். அப்போது இவர்களை அக்னிராஜ் தரப்பினர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து, புகார் அளிக்க , பொன் சக்தி தரப்பினர் காவல் நிலையம் சென்றபோது, காவலர்கள் இல்லாததால், அவர்கள்   ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த அக்னிராஜ் தரப்பினர்  அவர்களைத் தாக்கியதுடன், வாகனத்தையும் அடித்து நொறுங்கினர்.

இன்று பகலில், புகார் அளிக்க வந்தவர்களை, ஒரு ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது  குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj