வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (09:13 IST)

மயிலாடுதுறையை அதிர வைத்த ஹெல்மெட் கொள்ளையன்! – கைது செய்தது போலீஸ்!

மயிலாடுதுறையில் பூட்டிய கடைகளை கொள்ளையடித்து வந்த ஹெல்மெட் கொள்ளையனை பொதுமக்கள் வளைத்து பிடித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் பல பகுதிகளில் இரவு நேரங்களில் கடைகள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுமார் 120 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஹெல்மெட் அணிந்து திருடும் ஒரே நபர்தான் அனைத்து இடங்களிலும் கைவரிசை காட்டியதை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மயிலாடுதுறையில் கடை ஒன்றை ஹெல்மெட் திருடன் கொள்ளையடிக்க முயன்ற்போது பொதுமக்கள் வளைத்து பிடித்துள்ளனர். அவனை போலீஸார் கைது செய்து விசாரித்ததில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்றும், ஏற்கனவே அவர் மீது பொள்ளாச்சி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 35க்கும் அதிகமான வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.