தொடர்புடைய செய்திகள்
- 85 கேமரா, 5 ட்ரோன்கள்; சிக்காமல் தண்ணி காட்டும் புலி! – 16வது நாளாக தேடுதல் வேட்டை!
- 6 மணி நேரத்தில் 10.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி – தமிழகம் சாதனை!
- பொலிவிழந்த பொறியியல் படிப்புகள்; காத்து வாங்கும் கல்லூரிகள்!
- மழையால் வரத்து குறைவு; எகிறிய தக்காளி விலை! – மக்கள் அதிர்ச்சி!
- நிரம்பியது பூண்டி ஏரி; மதியம் தண்ணீர் திறப்பு! – வெள்ள அபாய எச்சரிக்கை!
தலைமையை நம்பி அதிமுக இல்லை.. தொண்டர்களால்தான் அதிமுக! – செல்லூர் ராஜூ!
அதிமுகவில் பொறுப்புகளில் மாற்றங்கள் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை தொடர்ந்து கட்சிக்குள் அடிக்கடி உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனிடையே கட்சியை மீட்பேன் என சசிக்கலா தெரிவித்துள்ளதுடன் அடிக்கடி அதிமுகவினருடன் பேசி வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ”கட்சியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்த்தெடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. இளைஞர்களுக்கு கட்சியில் புதிய பதவிகள், பொறுப்புகள் அளிக்கப்பட வேண்டும். தலைமையை நம்பி அதிமுக இல்லை. தொண்டர்களால்தான் அதிமுக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
