திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (13:39 IST)

6 மணி நேரத்தில் 10.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி – தமிழகம் சாதனை!

தமிழகத்தில் 5வது கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கிய நிலையில் 6 மணி நேரத்திற்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலமாக ஏராளமான மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரங்களை போலவே இந்த வாரமும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் பரிசுகளை மாவட்ட, கிராம நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 6 மணி நேரத்திற்குள்ளாக தமிழகம் முழுவதும் 10.57 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.