தொடர்புடைய செய்திகள்
- பெண்களை இழிவுபடுத்தி திருமாவளவன் பேசியது தவறு - நடிகை குஷ்பு குற்றச்சாட்டு
- இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... கமல் டுவீட்
- மனு சாஸ்திரத்தையே எரிச்சோம்.. போராட்டத்துக்கு வராமலா! – விசிகவுக்கு திக ஆதரவு!
- வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தர பரிசீலனை! – கூட்டணிக்காகவா? மாநாட்டிற்காகவா?
- பிரதமரை நீங்க செலக்ட் பண்ணுங்க.. முதல்வரை நாங்கதான் சொல்வோம்! – முருகனுக்கு ராஜேந்திர பாலாஜி பதில்!
திகவை தொடர்ந்து ஆதரவு கொடுத்த திருமுருகன் காந்தி! – வலுப்பெறும் மனு தர்மத்திற்கு எதிரான போராட்டம்
மனு தர்ம சாஸ்திரத்தை தடை செய்ய வேண்டுமென விசிக போராட்டம் நடத்த உள்ள நிலையில் அதற்கு மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் நாளை பெண்களை இழிவாக பேசும் மனுதர்ம சாஸ்திரத்தை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு முன்னதாக தி.க தனது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில், தற்போது மே17 இயக்கமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திருமுருகன் காந்தி “மனுதர்மத்திற்கு எதிரான போராட்டத்திற்கு வாழ்த்துகள் தோழர் திருமாவளவன். பெண்கள்,உழைக்கும் மக்கள் என அனைவரையும் இழிவு செய்யும் மனுதர்மத்தை நாகரிகமடைந்த எவராலும் ஏற்கமுடியாதது. வாய்ப்புள்ள அனைவரும் பங்கேற்போம், ஆதரிப்போம்,போராட்டத்தை விரிவுபடுத்துவோம். மனுதர்ம இழிவை துடைத்தெறிவோம்” என்று கூறியுள்ளார்.
