வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (16:12 IST)

இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... கமல் டுவீட்

தமிழகத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளதற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.

நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல என தெரிவித்துள்ளார்.