வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (12:23 IST)

பிரதமரை நீங்க செலக்ட் பண்ணுங்க.. முதல்வரை நாங்கதான் சொல்வோம்! – முருகனுக்கு ராஜேந்திர பாலாஜி பதில்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளரையே கூட்டணிக்கும் முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதிமுக அறிவிக்கும் முதல்வர் வேட்பாளரே கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என கூட்டணி கட்சிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் சட்டசபை தேர்தல் குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் “கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக தலைமைதான் முடிவு செய்யும்” என கூறியிருந்தார். இதனால் அதிமுக அறிவித்தப்படியே எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்படுவாரா என கேள்விகள் எழுந்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பாஜக முடிவு செய்யலாமே தவிர, தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக முதல்வர் வேட்பாளர்தா கூட்டணிக்கும் முதல்வர் வேட்பாளர். இதை கூட்டணி கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என கூறியுள்ளார்.