1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Man killed his aunt lover

அத்தையின் காதலனைக் கொன்ற மருமகன்! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

சென்னை
சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருக்கும் கோபி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பாடியில் வசிக்கும் ராணியின் கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து ராணிக்கும் கார் விற்பனை பிரதிநிதியான கோபி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் வளர்ந்துள்ளது. இது ராணியின் மருமகனான நந்தகுமார் என்பவருக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவரையும் சந்திக்கக் கூடாது என மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ராணியின் வீட்டுக்கு கோபி வந்தபோது அங்கே வந்த நந்தகுமார், கோபியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாற கோபியை கடுமையாக தாக்கியுள்ளார் நந்தகுமார். அவரிடம் இருந்து கோபியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் ராணி. ஆனால் சிகிச்சை பலனின்றி கோபி உயிரிழந்துள்ளார்.

கோபியின் தாயார் அளித்த புகாரின் பேரில் நந்தகுமார் இப்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
About Writer
mahendran
அடுத்த கட்டுரையில்
தேமுதிகவை விட்டுச் செல்வது துரோகம் - விஜயகாந்த்