வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (07:25 IST)

சென்னை மெட்ரோ ரயிலில் இனி டோக்கன் கிடையாதா? அதிரடி முடிவு

சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது பயணிகளுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வழங்கும் நிலையில் டோக்கன்களிஅ நிறுத்தி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது 
 
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த டோக்கன்கள் பயணிகள் தங்கள் பயண முடிவில் செலுத்திவிட வேண்டும் என்ற முறை அமல்படுத்தப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு டோக்கனை ஒருவர் மட்டும் இன்றி மீண்டும் மீண்டும் மற்றொருவரும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது பாதுகாப்பை கருத்தில் கொண்டு டோக்கன்களை நிறுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியில் இருந்து
 
சென்னை மெட்ரோ ரயிலில் டிக்கெட் வழங்க முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது