திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (10:15 IST)

காதலை ஏற்காத பெண் - வீடியோ காலில் தற்கொலை கொண்ட இளைஞர்!

கோப்புப் படம்

சென்னையில் வசித்து வரும் வடமாநில இளைஞர் ஒருவர் தன் காதலைப் பெண் ஒருவர் ஏற்காததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மணிப்பூரைச் சேர்ந்த ஜோனாதன் பமோயி என்ற 25 வயது இளைஞர் சென்னையில் சில வருடஙகளாக ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இரு நாட்களாக அவர் எந்த அறிவிப்பும் இல்லாமல் விடுப்பு எடுக்கவே சந்தேகமடைந்த மேலாளர் அவர் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அவர் மின் விசிறியில் தூக்கு மாட்டிய படியே இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து போலீஸாருக்குத் தகவல் செல்ல அவர்கள் தற்கொலைக்கானக் காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அதில் பமோயி தீவிரமாக ஒரு பெண்ணை காதலித்தாகவும் அதை அந்த பெண் ஏற்க மறுத்ததால் அவருக்கு வீடியோ கால் செய்து அந்த பெண் பார்க்கும்படி தற்கொலை செய்துகொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.