1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (20:59 IST)

ஒடும் காரில் வலுக்கட்டாயமாக தாலி கட்டிய இளைஞர்: பேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டு பரபரப்பு

ஒடும் காரில் வலுக்கட்டாயமாக தாலி கட்டிய இளைஞர்
கர்நாடக மாநிலத்தில் உறவுக்கார பெண் ஒருவரை கடத்தி ஓடும் காரில் கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக கழுத்தில் தாலி கட்டிய இளைஞர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் மனுகுமார் என்ற நபர், தன் உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் பெண்ணின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மனுகுமார், தையல் வகுப்புக்கு சென்று விட்டு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தினர்
 
ஓடும் காரில் மனுகுமார் அந்தப் பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி தாலி கட்டியதாக தெரிகிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்காமல் இருக்க காரின் உள்ளே பாட்டு சட்டத்தை ஒலிக்க செய்துள்ளார்கள். மேலும் இந்த கட்டாய திருமணத்தை வீடியோ எடுத்து அதனை மனுகுமார், தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து இந்த வீடியோ வைரலாகியதால் தானாக முன்வந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனுகுமாரையும், அவரது நண்பர்களையும் கைது செய்தனர். தனது மகளுக்கு தனது உறவினர் ஒருவரை கட்டாயப்படுத்தி தாலி கட்டிய சம்பவத்தால் மனமுடைந்த பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது