50 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து….? – டிக்டாக்கில் வீடியோ போட்டு பெருமிதம் !

டிக்டாக் சாகசம்
Last Modified வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (10:21 IST)
டிக்டாக் சாகசம்

இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் வெளியிட்ட வீடியோ காண்போரின் இதயத்துடிப்பை எகிற வைத்துள்ளது.

பலரும் டிக்டாக்கில் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வீடியோவாக வெளியிட்டு மகிழ்ந்து வருகின்றனர். டிக்டாக்கில் பாராட்டுகளைப் பெறவேண்டும் என்பதற்காக சிலர் ஆபாசமான வீடியோக்களைப் போடுவது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் உயிரைப் பணயம் வைத்து போடப்படும் வீடியோக்களும் வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் ஒரு நபர் தனது உடலில் கேமராவைப் பொருத்திக் கொண்டு
50 ஆவது மாடிக் கட்டிடத்தின் உச்சியில் கீழே இருக்கும் ஜன்னல் சுவர்களை பிடித்துக் கீழே இறங்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :