திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (12:02 IST)

சாலையில் அடிபட்டு கிடந்த இளைஞர்கள்: ஓடி சென்று காப்பாற்றிய அமைச்சர்

அமைச்சர் எஸ்பி வேலுமணி
கோயம்புத்தூரில் சாலையில் அடிப்பட்டு கிடந்த இளைஞர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

கோயம்புத்தூர் போடிப்பாளையம் சாலையில் வேகமாக வந்த இரண்டு பைக்குள் நேரெதிரே மோதிக் கொண்டதில் பைக்கில் வந்த இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். அந்த சமயம் அந்த சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இளைஞர்கள் அடிப்பட்டு சாலையில் கிடப்பதை கண்டு உடனடியாக அவர்களை காப்பாற்றியுள்ளார்.

தனது வாகனத்திலேயே இளைஞர்களை மருத்துவமனை அழைத்து சென்று அவர்களுக்கு மருத்து உதவிகள் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அமைச்சரின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.