1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 6 பிப்ரவரி 2020 (19:01 IST)

இளம் பெண்ணைக் கடத்தி ஓடும் காரில் தாலி கட்டிய இளைஞர் !

பெண்ணை கடத்தி தாலி கட்டிய இளைஞர்
கர்நாடக மாநிலம் ஹசனில் இளம்பெண்ணை கடத்தி , ஓடிக் கொண்டிருக்கும் காரில் வைத்து தாலி கட்டி அதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை போலீஸர் கைது செய்துள்ளனர்.
 
மனுகுமார் மனுகுமார் என்ற இளைஞர், தமது உறவுக்கார பெண்ணை, தன் நண்பர்களுடன் காரில் கடத்தினார்.
 
அப்போது ஓடும் காரில் அப்பெண்ணின் கழுத்தில் மனுகுமார் தாலி கட்டினார்.
 
மேலும், பெண்ணின் கதறல் கேட்காமல் இருக்க காரில் சப்தமாக பாட்டை வைத்து, அதை வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தற்போது மனுகுமார் மற்றும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.