பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...
அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்காக பலரும் காத்துக்கொண்டிருக்கும் சூழலை, அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி மிக கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
"அதிமுகவில் இருப்பவர்கள் தவெக-வில் இணைவதற்காகப் பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்" என்று அவர் சாடியுள்ளார். மேலும், பட்டியில் இருந்து ஆட்டுக்கூட்டம் ஓடுவது போல அதிமுகவிலிருந்து வெளியே சென்று இரண்டாம் கட்ட தலைவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை பார்ப்பதற்காகப் பலர் தவம் இருக்கின்றார்கள் என்றும், ஆனால் தவெக தலைவரான விஜய்யை கூட அவர்களால் நேரில் பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்ட அவர், இப்படிப்பட்ட ஒரு அவமதிப்பைச் சந்தித்துதான் அந்தக் கட்சியில் அவர்கள் கண்டிப்பாக சேர வேண்டுமா என்று கேபி முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், திமுக மற்றும் அதிமுக கூட்டணி என்பது ஒருபோதும் நடக்காத ஒன்று என்றும், கட்சியை விட்டு வெளியே சென்ற சுயநல மற்றும் சந்தர்ப்பவாதிகள் கிளப்பிவிட்ட கற்பனை கதைதான் இது என்றும் கே.பி. முனுசாமி மிக திட்டவட்டமாக தெரிவித்தார்.
Edited by Siva
