தொடர்புடைய செய்திகள்
- ரஸ்க் சாபிட்ரதே இனி ரிஸ்க் தான் போல... பிரிட்டானியா மீது பகீர் புகார்!
- ரூ 9.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய அமைச்சர் !
- கீழடி தொல் தமிழரின் மேன்மை மிகு நகர நாகரீகம் தொடர்பான கண்காட்சி
- இவர் என்ன நீர்மேலாண்மையில் டாக்டர் பட்டம் பெற்றவரா ? எம்.அர்.விஜயபாஸ்கர் ஆவேசம்
- முகம் கழுவ சென்ற மாணவி; நொடியில் மரணித்த கொடுமை – கரூரில் சோக சம்பவம்!
ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் – அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் எடுத்த முடிவு !
தான் வாங்கிய ரஸ்க் பாக்கெட்டில் இரும்பு போல்ட் ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த விவேகானந்தன் அது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம், பெராணி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன். இவர் நேற்று முன் தினம் கரூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் பிரிட்டானியா நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த பாக்கெட்டில் இருந்த ரஸ்க் ஒன்றில் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உற்றுப்பார்த்ததில் அது இரும்பு போல்ட் எனத் தெரிந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக இது சம்மந்தமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்ற அவர் இது சம்மந்தமாகப் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடமும் அந்த ரஸ்க்கில் உள்ள இரும்புத்துண்டைக் காட்டினார். குழந்தைகள் சாப்பிடும் உணவான ரஸ்க்கில் இப்படி அலட்சியமாக இருக்கும் நிறுவனம் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி அவர் வற்புறுத்தியுள்ளார்.
