ரஸ்க் சாபிட்ரதே இனி ரிஸ்க் தான் போல... பிரிட்டானியா மீது பகீர் புகார்!
பிரிட்டானியா நிறுவன ரஸ்க்கில், இரும்பு போல்டு இருந்ததாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் பேருந்து நிலையத்தில் விற்கப்பட்ட பிரிட்டானியா நிறுவன ரஸ்க்கில், இரும்பு போல்டு இருந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவேகானந்தன் என்பவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவரை கோரப்பட்டுள்ளது.
பிரிட்டானியா நிறுவன ரஸ்க்கில் போல்ட் கலந்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மாவு கலக்கும் எந்திரத்தில் இருந்து கழன்று விழுந்திருக்கலம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் மீது விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.