தொடர்புடைய செய்திகள்
- டாக்டர் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்க யோகி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
- மன்னிப்பு கேட்காததால் 1 ரூபாய் அபராதம்! அபராதம் கட்டலைனா சிறை! – உச்சநீதிமன்றம் உத்தரவு!
- விஜய் மல்லையா மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி
- இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம்!
- இறுதியாண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டுமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று அதிரடி தீர்ப்பு
பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லைக் கொடுத்த தந்தை – தீர்ப்பைக் கேட்டு மயக்கம்!
போக்ஸோ நீதிமன்றம் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் வழங்கிய தீர்ப்பைக் கேட்டு தந்தை நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் என்பவர் மீது அவரது மனைவி 2015 ஆம் ஆண்டு பெற்ற மகளுக்கே பாலியல் தொல்லை தந்ததாக புகார் அளித்தார். இதையடுத்து அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஐந்து வருடமாக நடந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டது. அதில் ஜேம்ஸ்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பைக் கேட்ட ஜேம்ஸ் கதறி அழுது நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.
அடுத்த கட்டுரையில்
