1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (07:54 IST)

இறுதியாண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டுமா? சுப்ரீம் கோர்ட்டு இன்று அதிரடி தீர்ப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து என அறிவிக்கப்பட்டு இருந்தும் இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் செமஸ்டர் தேர்வு எழுதிய ஆகவேண்டுமென யூஜிசி அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசு விடுத்த கோரிக்கையை யுஜிசி நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
யுஜிசியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 31 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் தொடுத்த இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது
 
இறுதி ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத வேண்டுமா என்ற வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் இன்று வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இறுதி ஆண்டு மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது