1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (18:23 IST)

இ-பாஸ் இல்லை என ஜாலியா சென்னைக்கு வருவோரின் கவனத்திற்கு... !

தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது என அறிவிப்பு. 
 
கொரோனா பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  ஆனால் இப்போது இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை என கூறப்பட்டுள்ளது.  
 
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் தற்போது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுபவர்களுக்கு கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படும் என கூறினார். 
 
அதோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தொற்று குறைந்து விட்டது என்று நினைக்காமல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற பயணம், வெளியே சுற்றுவதை 3 மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.