1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Man disguised himself as a woman

நிஜத்தில் ஒரு அவ்வை சண்முகி – பெண் வேடமிட்டு 3 வீடுகளில் வேலை செய்த நபர் !

ராஜா
தனது பெற்றோரைக் காப்பாற்றுவதற்காக மதுரையில் 3 வீடுகளில் வீட்டு வேலை செய்துள்ளார் ஒரு நபர்.

மானாமதுரை அருகே உள்ள மனையநேத்தலை எனும் கிராமத்தைச் சேர்ந்த ராஜா. இவருக்கு 40 வயது ஆகிறது. பெரிதாக படிப்பறிவு இல்லாத இவருக்கு தனது வயதான தாய் தந்தையரையும் காப்பாற்ற வேண்டிய சூழல். இந்நிலையில் இவர் பகல் முழுவதும் காணாமல் பொய் இரவான பின்பே வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர் பெண் வேடமிட்டு மதுரையில் 3 வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில் நெஞ்சை உருக்கும் விதமாக ஆணாக சென்று வேலை கேட்டால் யாரும் கொடுப்பதில்லை. அதனால்தான் பெண் வேடமிட்டு வீட்டு வேலை செய்து எனது பெற்றோரைக் காப்பாற்றி வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
”எனக்கு வெங்காய விலையே தெரியாது” அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர்