1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (22:20 IST)

டிசம்பர் மழையில் மூழ்கிய மூன்று திரைப்படங்கள்

கடந்த வெள்ளியன்று தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா, சமுத்திரக்கனியின் ’அடுத்த சாட்டை’ மற்றும் பிக்பாஸ் புகழ் ஆரவ்வின் ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின
 
இந்த மூன்று திரைப்படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களால் ஓரளவுக்கு பாராட்டப்பட்டது. குறிப்பாக ’எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் கொண்டாடினார்
 
இருப்பினும் இந்த மூன்று திரைப்படங்களும் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை என்றும் போட்ட முதலீட்டை கூட திரும்ப பெறாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வெள்ளிக்கிழமை இந்த படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களும் தொடர்ச்சியாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால் தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை என்றும் கூறப்படுகிறது
 
மேலும் மக்கள் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் சினிமாவை எப்படிப் பார்க்க முடியும் என்ற கேள்விதான் எழுகிறது. இதனால் இந்த மூன்று படங்களும் வசூல் அளவில் பெரும் நஷ்டம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் வரும் வெள்ளியன்று 5 திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் மற்றும் அடுத்த சாட்டை ஆகிய இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் தூக்கப்பட வாய்ப்பிருப்பதால் இந்த இரு படங்கள் பலத்த அடி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மொத்தத்தில் டிசம்பர் மழையின் வெள்ளத்தில் இந்த மூன்று படங்களுமே  மூழ்கிவிட்டது என்று தான் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்