வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (17:36 IST)

”எனக்கு வெங்காய விலையே தெரியாது” அதிர்ச்சியை கிளப்பிய அமைச்சர்

”நான் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை, அதனால் எனக்கு வெங்காய விலையே தெரியாது” என மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே

நாட்டில் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் வெங்காய விலை எகிறியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 150 க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெங்காய விலை அதிகரிப்பு குறித்து நிரூபர்கள் கேள்வி எழுப்பியதற்கு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஷ்வினி சௌபே, “நான் ஒரு வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்பதால் எனக்கு வெங்காய விலையின் நிலை எப்படி தெரியும்?” என கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். மத்திய அமைச்சருக்கு வெங்காய விலையின் நிலவரம் தெரியவில்லை என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.