புல்லட்டில் அமர்ந்து சுருட்டு பிடிக்கும் ராதிகா - மார்க்கெட் ராஜா MBBS மேக்கிங் வீடியோ!

papiksha| Last Updated: திங்கள், 2 டிசம்பர் 2019 (14:15 IST)
‘பிக் பாஸ்’ புகழ் ஆரவ் ஹீரோவாக நடித்து கடந்த 29ம் தேதி வெளியான புதிய படம் ‘மார்க்கெட் ராஜா MBBS’. இந்த படத்தை பிரபல இயக்குநர் சரண் இயக்க ஆரவ்வுக்கு ஜோடியாக காவ்யா தபர் நடித்திருந்தார். 
 
இவர்களுடன், ராதிகா சரத்குமார், நாசர், ரோகினி, ஷாயாஜி ஷிண்டே, பிரதீப் ராவத், ஹரீஷ் பெராடி, ஆதித்யா மேனன், சாம்ஸ், விஹான், நிகிஷா பட்டேல் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷன் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்து வெளியான இப்படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று பிரபல யூடியூப் சேனனில் வெளியாகியுள்ளது. ஆரவ் மற்றும் ராதிகாவின் நடிப்பு பேசும்படியாக அமைந்துள்ளதாக நெட்டிசன்ஸ் கூறி வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :