1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai ladies hostel will be demolished

தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு: உரிமையாளருக்கு நோட்டீஸ்

தீ விபத்து
மதுரையில் இயங்கி வந்த பெண்கள் விடுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆசிரியர் உள்பட இரண்டு பேர் பலியான நிலையில் அந்த கட்டிடத்தை இடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் கட்ராபாளையம் பகுதியில் இயங்கி வந்த பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென எரிந்த நிலையில் தீ விபத்தால் ஏற்பட்ட புகை காரணமாக மூச்சு திணறி ஒரு ஆசிரியை உள்பட இரண்டு பேர் பலியானார்கள்.

இதையடுத்து விபத்து நடந்த இடத்தை கலெக்டர் சங்கீதா ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அவர்களும் கட்டிடத்தை பார்வையிட்டார்.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பெண்கள் பலியான விடுதியை இடிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் விடுதி செயல்பட்டு வந்த கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும் மதுரை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழக அரசையோ, முதல்வரையோ எதிர்த்து விசிக மதுவிலக்கு மாநாடு நடத்தவில்லை: அமைச்சர் முத்துசாமி