1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. special buses for tirupathi

திருப்பதி பிரம்மோற்சவ விழா: சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யும் தமிழக போக்குவரத்து துறை..!

திருப்பதி
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதை எடுத்து தமிழக பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம், நான்காம் தேதி பிரமோற்சவ விழா, எட்டாம் தேதி கருட சேவை ,பன்னிரண்டாம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த பிரம்மோற்சவ விழாவை காண தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பரிசுகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் தங்கும் விடுதியை இடிக்க முடிவு: உரிமையாளருக்கு நோட்டீஸ்