1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:11 IST)

மகளிர் விடுதியில் திடீரென வெடித்த ஃப்ரிட்ஜ்! 2 பெண்கள் பரிதாப பலி! - மதுரையில் பரபரப்பு!

Car Fire in Rajasthan

மதுரையில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் இருவர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

மதுரை மாவட்டம் கட்ராபாளையத்தில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பலர் தங்கி வந்துள்ளனர். நேற்று இரவு நேரத்தில் விடுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பல பெண்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்த நிலையில் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 

உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீ விபத்தில் பரிமளா, சரண்யா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பெண்கள் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விடுதியில் உள்ள ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K