1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai Chithirai Thiruvizha today starts

மீனாட்சி கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 16 அழகர் ஆற்றில் இறங்குகிறார்

Chithirai
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது
 
 இன்று கொடியேற்றத்துடன் மதுரை சித்திரை திருவிழா காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ளதாக கோவில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர் 
 
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 14ஆம் தேதியும், ஏப்ரல் 15ஆம் தேதி திருத்தேரோட்டம், ஏப்ரல் 16ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
அமெரிக்காவில் ஒரு விநாயகர் கோவில் தெரு! – வைரலாகும் புகைப்படம்!