1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:29 IST)

மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!

மீண்டும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லா ரயில்: பயணிகள் மகிழ்ச்சி!
மீண்டும் மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுரை - செங்கோட்டை இடையே இயங்கிவந்த முன்பதிவில்லா பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது.
 
 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் இன்று முதல் தினமும் இரண்டு முறை மதுரை - செங்கோட்டை இடையே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் வைத்து மாலை அணிவித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது