1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:20 IST)

சென்னை மாநகராட்சி பட்ஜெட் ஏப்ரல் 9ல் தாக்கல்: புதிய திட்டங்கள் இருக்குமா?

Chennai Corporation
சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஏப்ரல் 9ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
 
6 ஆண்டுகளாக தனி அதிகாரி பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு மேயர் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சென்னை மேயர் ப்ரியா தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டில் சென்னை மக்களுக்கு புது வசதிகள் செய்து தரும் வகையில் புதிய திட்டங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சென்னை மாநகராட்சியின் 2022 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சியின் கட்டிடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது