தொடர்புடைய செய்திகள்
- ஒரு முன்னாள் அமைச்சரை இப்படியா கை ஆள்வது? ஆர்.பி உதயகுமார் ஆதங்கம்!
- வெளிநாட்டுக்கு தப்ப ராஜேந்திரபாலாஜி ப்ளான்? லுக் அவுட் நோட்டீஸ் வழங்க போலீஸ் தீவிரம்!
- ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் மனு! – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!
- ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 2 தனிப்படைகள்: மொத்தம் எட்டு!
- Most Wanted ஆன ராஜேந்திர பாலாஜி: 9 தனிப்படைகள் அமைத்து தேடல்!
ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!
ராஜேந்திர பாலாஜி வெளிமாநிலத்திற்கோ, வெளி நாட்டிற்கோ தப்பி செல்லாமல் இருப்பதை தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.
அதிமுக ஆட்சியின் போது பால் வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த விவகாரத்தில் தேடப்பட்டு வருகிறார். அவரை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு காத்திருப்பில் உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்லும் வாய்ப்பு உள்ளதாக போலீஸ் கருதும் நிலையில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவது குறித்து காவல்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
தற்போது ராஜேந்திர பாலாஜி வெளிமாநிலத்திற்கோ, வெளி நாட்டிற்கோ தப்பி செல்லாமல் இருப்பதை தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது காவல்துறை.
அடுத்த கட்டுரையில்
