1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (17:02 IST)

Most Wanted ஆன ராஜேந்திர பாலாஜி: 9 தனிப்படைகள் அமைத்து தேடல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் பதவியில் இருந்தபோது தமிழக அரசின் பொது நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார்.
 
ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடன் தொடர்புடைய 4 பேரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படைகள் மதுரை, சென்னை பகுதிகளில் தீவிரமாக தேடி வந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி பெங்களூர் தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து தனிப்படை போலீஸார் பெங்களூர் விரைந்தனர்.
 
இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மோசடி புகாரில் தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சரை பிடிக்க இதுவரை 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.