புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (11:21 IST)

முதல் முறையாக அடுத்தடுத்த இரு ஏவுகணை சோதனைகள் வெற்றி: மத்திய அரசு

நாட்டில் முதல் முறையாக அடுத்தடுத்து 2 ஏவுகணை சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது
 
அணு ஆயுதங்களை தாங்கி செய்யும் இந்தியாவின் பிரலே என்ற ஏவுகணை நேற்று சோதனை செய்யப்பட்டது என்பதும் அது வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்யக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று பிரலே ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்த நிலையில் இன்று ஒடிசாவில் 500 கிலோ மீட்டர் தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என்பதும், இந்த ஏவுகணை சோதனையும் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து நாட்டில் முதல் முறையாக அடுத்தடுத்த 2 ஏவுகணை சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது