1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. LIC Building in Chennai Paris Corner faces fire accident

பற்றி எரிந்த LIC பில்டிங்: சாம்பலான முக்கிய ஆவணங்கள்!

LIC பில்டிங்
சென்னை எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் இன்று காலை 5 :30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எல்ஐசி கட்டிடத்தின் நான்காவது மாடியில் பற்றிய தீயானது மற்ற இடங்களுக்கும் பரவ துவங்கியுள்ளது. 
 
இதனால் விரைந்து வந்த தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய இடங்களின் 7 தீயணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. 
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தீயணைப்புதுறையினர். இந்த விபத்தில் எல்ஐசி-யின் 5 வது மாடியில் உள்ள பல முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன. 
 
விபத்து குறித்து போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ பற்றியது என தெரியவந்துள்ளது. மேலும் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
எப்போது அடங்கும் இந்த மக்கள் கூட்டம்? - 3 லட்சத்தை தாண்டிய கைது எண்ணிக்கை