1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (09:11 IST)

சென்னையை போல் போராட்டம் செய்த அரியானா மக்கள்: டிஎஸ்பி அதிரடி நடவடிக்கை

சென்னையை போல் போராட்டம் செய்த அரியானா மக்கள்
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் சமீபத்தில் சென்னை மருத்துவர் சைமன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு அதிரடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை என அறிவிப்பு செய்தது
 
இந்த நிலையில் சென்னையை போல் ஹரியானா மாநிலத்திலுள்ள அம்பாலா என்ற பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்திலுள்ள அம்பாலா என்ற பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைக்க என தனியாக ஒரு நிலத்தை அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. 
இந்த நிலத்தின் அருகே வசிக்கும் பொதுமக்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அந்த இடத்தில் புதைக்கக் கூடாது என போராட்டம் செய்தனர். சுமார் 200 முதல் 400 பேர் வரை ஊரடங்கையும் மீறி அவர்கள் போராட்டம் நடத்தியது மட்டுமின்றி இதுகுறித்து சமாதானப்பேச்சுவார்த்தை நடத்த சென்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களையும் அவர்கள் தாக்கியதாக தெரிகிறது
 
இதனையடுத்து போராட்டம் செய்த பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அம்பாலா மாநில டிஎஸ்பி ராம்குமார் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து போராட்டத்தை தூண்டியவர்கள், போராட்டம் செய்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக அரியான போலீஸார் தெரிவித்துள்ளனர்.