சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா: வாடிக்கையாளர்களுக்கும் சோதனை
சென்னை சலூன் கடைக்காரருக்கு கொரோனா
ஊரடங்கு நேரத்தில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் சென்னையை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் கடையை திறந்து வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டிய நிலையில் தற்போது சலூன் கடைக்காரர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை கோயம்பேடு பகுதியில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர் சமீபத்தில் கடை திறந்து வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா தோற்று நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து இவரது கடைக்கு வந்து முடி வெட்டிய வாடிக்கையாளர்கள் அனைவரும் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது
அதுமட்டுமின்றி தினமும் பத்து பேர்களுக்கு வீடுகளுக்கே சென்று இவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அவர்களையும் தனிமைப்படுத்த போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் சலூன் கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என அரசு அறிவுறுத்திய நிலையில் சலூன் கடையை இவர் திறந்து வைத்தது குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது