வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:03 IST)

எந்த மாநிலத்திலும் இ-பாஸ் இல்லை, தமிழகத்தில் மட்டும் ஏன்? எல்.முருகன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வரும் நிலையில் 7ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இபாஸ் முறைக்கு மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை
 
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது இபாஸ் கட்டாயம் என்ற என்ற நிலை தற்போதும் உள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் இது குறித்து கூறிய போது இபாஸ் முறையை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் 
 
மேலும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இபாஸ் முறையை நீக்க வேண்டும் என்றும் இந்தியாவில் மற்ற எந்த மாநிலத்திலும் இபாஸ் நடைமுறை இல்லை என்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
தமிழக பாஜக தலைவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இபாஸ் முறையை ரத்து செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்