1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (20:31 IST)

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை சிஎஸ்கேவுக்குத்தான்: பிரபல கிரிக்கெட் வீரர் கணிப்பு

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் ஆக சிஎஸ்கே ஆகவேண்டியது. ஆனால் கடைசி கட்டத்தில் நூலிழையில் கோப்பையைத் தவற விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு கண்டிப்பாக சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்று பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட்லீ தெரிவித்துள்ளார்
 
13வது ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற இருப்பதாகவும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் அணி எதுவாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிரட்லீ இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வயதானவர்கள் இருந்தாலும் அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் தட்பவெப்ப நிலையும் சென்னையின் தட்பவெப்பநிலையும் கிட்டத்தட்ட ஒன்று என்பதால் சென்னை அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பிரட்லீ தெரிவித்துள்ளார்