அண்ணே நீங்களுமா?? ரீசார்ஜ் கட்டணத்தை தாறுமாறாய் உயர்த்திய BSNL !!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:35 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்டின் சில திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
சமீபத்தில் ஜியோ தனது சலுகை பலன்களை குறைந்த நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்டின் சில திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... 
 
1. BSNL 2 ஜிபி CUL மாதாந்திர பிராட்பேண்ட் பிளான் ரூ.349 லிருந்து ரூ.369  உயர்த்தப்பட்டுள்ளது. 
 
2. BSNL 2 ஜிபி CUL திட்டத்தின் அன்லிமிடேட் காலிங் வசதி கொண்ட பிளானின் விலை ரூ.399  இருந்து தற்போது ரூ.419 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
3. BSNL 3ஜிபி CUL திட்டத்தின் விலை 499 ரூபாயிலிருந்து 519 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
4. BSNL 4 ஜிபி CUL பிளானின் கட்டணம் ரூ.599 இலிருந்து ரூ.629 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
5. BSNL 5 ஜிபி CUL பிளானின் மாதாந்திர கட்டணம் ரூ.699 இலிருந்து ரூ.729  உயர்த்தப்பட்டுள்ளது. 
 
6. BSNL சூப்பர் ஸ்டார் 300 பிளானின் கட்டணம் 749 ரூபாயிலிருந்து 779 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
7. BSNL 15 ஜிபி CUL திட்டத்தின் விலை 999 ரூபாயிலிருந்து 1,029 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :